கருப்பு பணம் வைத்திருப்பவர்களே வருமான வரித்துறைக்கு பயப்பட வேண்டும் : சி.டி ரவி

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற பாரதிய ஜனதா வேட்பாளர் சரஸ்வதியை ஆதரித்து பா.ஜ.க தேசிய பொது செயலாளரும் , மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மொடக்குறிச்சியல் பிரச்சாரம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த C.T.ரவி , வருமான வரித்துறை என்பது ஒரு சுதந்திரமான அமைப்பு என்றும் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் கருப்புப்பணம் வைத்துள்ளவர்களே கவலைப்பட வேண்டும் என்றார்.
கருத்துகணிப்பு என்பது சர்வே மட்டும் என்ற ரவி , 2016 யிலும் திமுக தான் வரும் என்றார்கள் ஆனால் அதிமுக தான் வெற்றி பெற்றது ..திமுக என்றாலே கட்டப்பஞ்சாய்த்து , ஊழல் , நில அபகரிப்பு என்பதால் மக்கள் ஆராய்ந்து ஓட்டு போடுவார்கள் என்றார்..
கோ பேக் மோடி என்று சொன்னாலும் தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொடுத்தவர் மோடி என்று கூறி கூறிய சிடி.ரவி திட்டங்களை பட்டியலிட்டார்.
மாற்றுகட்சியிலிருந்து பா.ஜ.க விற்கு வந்தாலும் ஜெயிக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜாதி மத வேறுபாடுயின்றி பிரதமர் மோடி திட்டங்களை செயல்படுத்துகிறார்..
11 ஆயிரம் கோயில்கள் ஒரு கால பூஜை கூட இன்றி இருப்பதாகவும்,.ஜக்கி வாசுதேவின் கோயில்களை சீரமைப்போம் திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் பாபர் ஒரு கொள்ளையக்காரன் என்றும் ராமர் ஒரு மரியாதை புருஷோத்தமர் இவ்வாறு அவர் தெரிவித்தார்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu