சர்வதேச சிலம்பம் போட்டி: தங்கம் வென்ற ஈரோடு மாணவிக்கு பாஜக எம்எல்ஏ பாராட்டு

சர்வதேச சிலம்பம் போட்டி: தங்கம் வென்ற ஈரோடு மாணவிக்கு பாஜக எம்எல்ஏ பாராட்டு
X

சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற ஈரோடு மாணவிக்கு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி பாராட்டு.

சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஈரோடு மாணவி கோமதிக்கு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி பாராட்டுக்களை தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் கோமதி. இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கோமதி சிலம்பம் சுற்றுவதில் கைதேர்ந்தவர். மாநில, தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று, தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில், நேபாள நாட்டில் கடந்த 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடந்த சர்வதேச அளவிலான போட்டியில் கோமதி கலந்து கொண்டு, தங்க பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இதையடுத்து, நேபாள நாட்டில் இருந்து நேற்று ஈரோடு திரும்பிய மாணவி கோமதியை, ஈரோடு ரயில் நிலையத்தில் மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ., சரஸ்வதி நேரில் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்து வரவேற்று, பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், பயிற்சியாளரும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!