பாஜக உண்ணாவிரதம் கர்நாடகாவிலுள்ள அனைத்து எதிர்கட்சி, ஆளுங்கட்சிக்கு எதிரானது: அண்ணாமலை
இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன்படி அவர் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள திருவுருவ சிலைக்கு தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்தப்பில் அண்ணாமலை கூறியதாவது , 1967 அப்புறம் வந்த தமிழக அரசு பாடப்புத்தகத்தில் சுதந்நிர போராட்ட வீரர் குறித்த வரலாறு இல்லை. நிறைய வரலாறு புறக்கணிப்பட்டுள்ளது. கீழடி ஆய்வை வரவேற்கிறேன்.கீழடி ஒருவருக்கு சொந்தமில்லை. நீட் தேர்வை பொறுத்தவரை சமூகநீதியை தாண்டி வெற்றி பெற்றுள்ளது. நீட் யாருக்கும் எதிரானது அல்ல. மா.சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுதி முதலில் பாஸ் செய்யட்டும்.பா.ஜ.க உண்ணாவிரதம் கர்நாடகாவிலுள்ள அனைத்து எதிர்கட்சி மற்றும் ஆளுங்கட்சிக்கு எதிரானது . தமிழக விவசாயிகளுக்காக பொதுமக்களுக்காக தான் உண்ணாவிரதம்.தமிழக மக்களையும் , தமிழ் உணர்வையும் பிரதமர் மோடி மதித்து வருகிறார். தமிழக பா.ஜ.க ஒவ்வொரு வீடு வீடாக சென்று மோடி செய்த திட்டங்கள் குறித்து விளக்குவோம். தேர்தல் அறிக்கையில் சொன்னதை முதலில் திமுக செய்யட்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu