ஈரோடு அருகே சிறுமிகள்பாலியல் பலாத்காரம், காமமிருகம் கைது

ஈரோடு அருகே சிறுமிகள்பாலியல் பலாத்காரம், காமமிருகம் கைது
X

ஈரோடு அருகே சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நபர்

அரச்சலூர் அருகே இரண்டு சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த சில்லாங்காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (45) இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளது.

இவருடைய ஒன்பது வயது சிறுமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிகள் என பள்ளிக் குழந்தைகள் சில்லாங்காட்டு புதூரில் உள்ள பள்ளியின் விளையாட்டு திடலில் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (61) விவசாயக் கூலி என்பவர் 9 மற்றும் 8 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து அருகே உள்ள முட்புதரில் கட்டாயப்படுத்தி அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் மீது அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து போஸ்கோ சட்டத்தின் கீழ் சங்கரை நேற்றிரவு கைது செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்