மொடக்குறிச்சியில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி பிரச்சாரம்

மொடக்குறிச்சியில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி பிரச்சாரம்
X
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் சரஸ்வதியை ஆதரித்து நடிகை கௌதமி தீவிர பிரசாரம் செய்தார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ., வேட்பாளர் சரஸ்வதியை ஆதரித்து பா.ஜ. தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான கௌதமி பேசும்போது, தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் கடந்த ஆண்டுகளில் எண்ணற்ற பல நலத்திட்டங்கள் பொது மக்களுக்கு நேரடியாக கிடைத்துள்ளன.

மத்தியிலும் மோடி அரசு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்தனர். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைய வேண்டும்.

அடிப்படை வசதிகள் அனைத்து இடத்திலும் கிடைத்துள்ளன. மொடக்குறிச்சியில் பெரிய அளவில் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் தார் சாலை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயம் ஆரோக்கியமாக காணப்படுகிறது.

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி வருகின்றனர். குடும்பத் தலைவிகளின் பாரத்தை குறைக்க ஆண்டுக்கு 6 சிலிண்டர், சோலார் அடுப்பு, குடும்பத் தலைவிக்கு மாதம் 1,500 ரூபாய் என எண்ணற்ற திட்டங்களை அ.தி.மு.க.,அரசு தேர்தல் அறிக்கையில் கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,கூட்டணி வேட்பாளரான சரஸ்வதிக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!