மின்சார வாரிய ஊழியர் வீட்டில் ரூ.2.10 லட்சம் கொள்ளை

மின்சார வாரிய ஊழியர் வீட்டில் ரூ.2.10 லட்சம் கொள்ளை
X

ஈரோடு அருகே மின்சார வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அருகே உள்ள மண்கரடு, வித்யா நகரில் வசித்து வருபவர் சண்முகம். இவரது மனைவி வேணி. சண்முகம் மின்சார வாரியத்தில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் சண்முகம் காலையில் பணிக்கு சென்றுவிட்டார். வேணி தனது தாயார் வீட்டிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அருகிலிருந்தவர்கள் சண்முகம் மற்றும் வேணிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து வீட்டிற்கு வந்த சண்முகம் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் சம்பவம் நடந்த அன்று 2 மணிக்கு வீட்டின் முன்பு கார் வந்து நின்றதாகவும் அந்த கார் சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னர் சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story