கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு செய்ய தமிழக அரசு 710 கோடி ஓதுக்கீடு - விவசாயிகள் வரவேற்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கரூர் மாவட்டம் மங்களபட்டி வரை 125 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் கீழ்பவானி பாசன கால்வாய் மூலம் இரண்டு லட்சத்து ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கீழ்பவானி கால்வாய் வெட்டப்பட்டு இதுவரை 60 ஆண்டுகளாக சீரமைப்பு செய்யப்படாத நிலையில் தற்போது தமிழக அரசு கீழ்பவானி கால்வாய் மறுசீரமைப்பு செய்ய 710 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 23ஆம் தேதி டெண்டர் விடப்பட்டு பிப்ரவரியில் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பான கீழ்பவானி முறைநீர்ப் பாசன சபையின் பொதுக்குழுக்கூட்டம் அதன்தலைவர் காசியண்ணன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் செயலாளர் பெரியசாமி, 60 ஆண்டுகளுக்குப்பிறகு கீழ்பவானி கால்வாயை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு 710 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்திருப்பதை வரவேற்பதாகவும், இதற்காக நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் , இந்த கால்வாய்லில் முறையற்ற பாசனம் செய்பவர்கள் இத்திட்டத்தைப்பற்றி தவறான தகவல் பரப்பி வருவதாகவும் தெரிவித்தார். கால்வாய் மறுசீரமைப்பு மூலம் கரைகள் பலப்படுத்தப்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu