தமிழக முதல்வர் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்- தேஜஷ்வி சூர்யா

தமிழக முதல்வர் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்- தேஜஷ்வி சூர்யா
X

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் என அகில பாரத இளைஞரணி தலைவர் தேஜஷ்வி சூர்யா தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக., சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி போட்டியிடுகிறார். இந்நிலையில் மொடக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராணியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக மொடக்குறிச்சியில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம்எல்ஏ., சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவர் கணபதி, துணைத்தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பாஜக., இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் தேர்தல் பணிமனையில் நடைபெற்றது. இதில் அகில பாரத இளைஞரணி தலைவரும், பெங்களூர் தெற்கு தொகுதி எம்.பியுமான தேஜஷ்வி சூர்யா கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஜாதி, மத வெறி, கலவரம் போன்ற எதுவும் இல்லை. பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். இந்த நல்லாட்சி தொடர ஆதரவளிக்க வேண்டும் என பேசினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!