ஏர்கலப்பையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விவசாயி

ஏர்கலப்பையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விவசாயி
X

ஈரோடு மாவட்டத்தில் ஏர் கலப்பையுடன் விவசாயி ஒருவர் மனு தாக்கல் செய்ய வந்தார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் விவசாயி தங்கவேல் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்ய ஏர்கலப்பையுடன் வந்தார். ஆனால் ஏர்கலப்பையுடன் மனுதாக்கல் செய்ய காவல்துறை அனுமதி மறுத்துவிட்டனர். எனவே ஏர்கலப்பை இல்லாமல் தங்கவேலு மொடக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராணியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்கவேலு கூறும் போது, அனைத்து அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு என ஒரு தொகுதியை பொது தொகுதியாக ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இவர் கடந்த 2012ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ,சேலம் , ஈரோடு பாராளுமன்ற தேர்தல் , 3 முறை மொடக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!