அந்தியூரில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ

அந்தியூரில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ
X

அந்தியூர் பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்த எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

அந்தியூர் வட்டாரத்தில் 91 மையங்கள் மூலம் 12 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை எம்எல்ஏ வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையத்தில் சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்து குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது சின்னத்தம்பிபாளையம் அரசு மருத்துவர் சக்தி கிருஷ்ணன், திமுக நிர்வாகிகள் பழனிச்சாமி, பாண்டியம்மாள் யாஸ்மின் தாஜ் சையது முஸ்தபா மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, அந்தியூர், அத்தாணி, பர்கூர், ஒசூர், எண்ணமங்கலம், சின்னதம்பிபாளையம் ஆகிய 6 ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, உட்பட்ட 91 மையங்களில் 11,588 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சுகாதார மேற்பார்வையாளர் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 400–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future