வேம்பத்தி ஏரியின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

வேம்பத்தி ஏரியின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு
X

வேம்பத்தி ஏரியை ஆய்வு செய்த எம்எல்ஏ.

வேம்பத்தி ஏரிக்கு அருகே உள்ள தோட்டகுடியாம்பாளையம் குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வேம்பத்தி ஏரி உள்ளது. 13 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் தற்போது 12.25 அடிக்கு தண்ணீர் உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வேம்பத்தி ஏரிக்கு வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் விரைவில்‌ வேம்பத்தி ஏரியானது முழு கொள்ளளவையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், வேம்பத்தி ஏரியின் வடக்கு கரை பகுதியில் உள்ள தோட்டக்குடியாம்பாளையம், அர்ஜீன காலனி குடியிருப்பு, பகுதிகளில் ஏரியில் இருந்து நீரானது குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. இதனையடுத்து, குடியிருப்பு பகுதிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார் உடனிருந்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!