அந்தியூர் கிளை நூலகத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

அந்தியூர் கிளை நூலகத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
X

அந்தியூர் கிளை நூலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்

அந்தியூர் கிளை நூலகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், அந்தியூர் பேரூராட்சியின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அந்தியூர் சிவசக்தி நகரில் உள்ள கிளை நூலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட சட்டமன்ற உறுப்பினர், புத்தகங்களின் இருப்பு, பயன்பாட்டாளர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றை கேட்டறிந்தார். மேலும் கிளை நூலகத்திற்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்த எம்எல்ஏ விரைந்து நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது கிளை நூலகப் பொறுப்பாளர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி