கீழ்வாணியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி துவக்கம்
நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்த போது எடுத்த படம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் கீழ்வாணி ஊராட்சி இந்திராநகரில் உள்ள மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து சிறு, சிறு விரிசல்கள் ஏற்பட்டது.இதனால், தொட்டியை தாங்கி நிற்கும் தடுப்பு தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்ததால், தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும் என ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இந்திராநகரில் 15வது மானிய நிதிக்குழுவில் இருந்து ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்து, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.இதைதொடர்ந்து, அதற்கான பணிக்கு பூமி பூஜை இன்று நடந்தது. கீழ்வாணி ஊராட்சி மன்ற தலைவி செல்வி நடராஜன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி, புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணியை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சந்திரன், ஒன்றிய தலைவி வளர்மதி தேவராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிரகாஷ், வார்டு உறுப்பினர்கள் புஷ்பாவதி மற்றும் கஸ்தூரி , ஊராட்சி செயலாளர் பிரபாகரன் , தலைமையாாசிரியர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu