அந்தியூர் அருகே யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு அரசு சார்பில் ஈமச்சடங்கு நிதி வழங்கிய எம்எல்ஏ!

X
By - S.Gokulkrishnan, Reporter |3 May 2025 10:30 AM IST
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் ஈமச்சடங்கு நிதியை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார்.
அந்தியூர் அருகே யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் ஈமச்சடங்கு நிதியை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் விராலிகாட்டூரை சேர்ந்தவர் அங்கப்பன் (வயது 79). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட சீலக்கரடு என்ற இடத்தில் யானை தாக்கி இறந்தார்.
இந்த நிலையில், நேற்று அங்கப்பனின் குடும்பத்தினரிடம் அரசு சார்பில் முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் ஈமச்சடங்கு நிதியை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ வழங்கினார். அப்போது, சென்னம்பட்டி ரேஞ்சர் ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu