அந்தியூரில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

அந்தியூரில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு
X

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

அந்தியூர் அரசு பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்து கொண்டு எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பெற்றோர்களிடம் கருத்து கேட்டார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, மாணவர்கள்னை விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் எனவும், மாணவர்கள் திறம்பட படிக்கும் பட்சத்தில் அரசு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும், குறிப்பாக பட்ஜெட் கூட்டத்தொடரில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் பேசினார்.

பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இதேபோல் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திலும் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்துகொண்டு பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்டறிந்தார்.

Tags

Next Story
future ai robot technology