அந்தியூர் பேரூராட்சியில் புதிய நீர்தேக்க தொட்டியை எம்எல்ஏ திறந்து வைப்பு

அந்தியூர் பேரூராட்சியில் புதிய நீர்தேக்க தொட்டியை எம்எல்ஏ திறந்து வைப்பு
X

அந்தியூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டில் உள்ள கலைஞர் வீதியில் புதிய நீர்த்தேக்க தொட்டியை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

அந்தியூர் பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீர்தேக்க தொட்டியினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டில் உள்ள கலைஞர் வீதியில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அப்பகுதியில் குறைவான அளவே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என்றும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!