கோபியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

கோபியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
X

நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்த அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ஏ.ஜி‌.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இப்பகுதி விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, கூகலூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார். கடந்த ஆண்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள், இந்த ஆண்டு முதல் அரசுக்கு சொந்தமான நிலத்தை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை செயல்படுவது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
ai marketing future