பர்கூரில் சாலை மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

பர்கூரில் சாலை மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ
X

சாலை பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ. 

பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட கத்தரிபட்டி முதல் கத்திரிமலை வரை 8 கிலோ மீட்டருக்கு சாலை மேம்பாடு பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

பர்கூர் அருகே ரூ.1.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட கத்தரிமலை கிராமத்தில் 75-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டி கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் , முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ரூ.1 கோடியை 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, கத்திரிப்பட்டி முதல் கத்திரிமலை வரை சுமார் 8 கிலோ மீட்டருக்கு சாலை மேம்பாடு பணிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று தொடங்கி வைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!