15-18 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ

15-18 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை  துவக்கி வைத்த  எம்எல்ஏ
X

தடுப்பூசி பணியை துவக்கி வைத்த அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாச்சலம். 

அந்தியூரில் 15-18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியினை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் இன்று முதல், 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஜனவரி 10 ஆம் தேதி முதல் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கே சென்று சிறுவர்களுக்கு நேரடியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அந்தியூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.


மேலும், அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள செல்லம்பாளையம் மாதிரிப்பள்ளி, தவிட்டுப்பாளையம் உயர்நிலைப்பள்ளி பள்ளிகளில், பயிலும் 15 வயது முதல் 18 வயது வரையிலான சுமார் 1500 மாணவ மாணவியருக்கு தடுப்பூசி போடும் பணியினை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!