அந்தியூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு

அந்தியூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு
X

அந்தியூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய அலுவலர்களுடன் எம்எல்ஏ வெங்கடாசலம் ஆலோசனை நடத்திய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு மேற்கொண்டு, மின்வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்தியூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு மேற்கொண்டு, மின்வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (டிச.,2) திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மின்வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


இந்த ஆலோசனையில், தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கிட வேண்டும். சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றிட வேண்டும். அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் மின்கடத்திகளை, மின் ஒயர்களை உயர படுத்த வேண்டும்.

உயர் மின்னழுத்த கம்பிகளை நிலத்துக்கு அடியில் கொண்டு சென்றிட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அந்தியூர் பேரூராட்சி பகுதிக்கு செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்கிடும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


மேலும், விவசாய பணிகள் மேற்கொள்ள தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கிடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்தும் விண்ணப்பித்த நெசவாளர்கள் எத்தனை பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது எத்தனை பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந்தார்.

இதில், உதவி செயற்பொறியாளர் அங்கப்பன், இளநிலை பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
இந்த குளிர்காலத்துல டெய்லியும் வெந்நீர்ல குளிக்கிறீங்களா?.. கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க!