அந்தியூரில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எம்எல்ஏ உதவி

அந்தியூரில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எம்எல்ஏ  உதவி
X

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை வழங்கிய எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

அந்தியூரில் 15 வீடுகளில் மழைநீர் புகுந்து பாதிப்புக்குள்ளானதை பார்வையிட்ட எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் உதவிகளை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் நேற்று நள்ளிரவில் கனமழை பெய்ததால் தெப்பக்குளம் வீதி பகுதியில் 15 வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் சேதமடைந்த பகுதிகளை அந்தியூர் தொகுதி ஏ.ஜி. வெங்கடாசலம் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். அப்போது அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் அம்பிகா, கிராம நிர்வாக அலுவலர் யசோதா தேவி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai tools for education