அந்தியூரில் சத்துணவு அமைப்பாளருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

அந்தியூரில் சத்துணவு அமைப்பாளருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு
X

கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்

அந்தியூரில் சத்துணவு அமைப்பாளருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பேசினார்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அத்தாணி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்துணவு அமைப்பாளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்து பேசினார். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், சத்துணவு அமைப்பாளர்களிடம், நிறை குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ, விரைவில் தேவையான வசதிகளை செய்வதாக உறுதியளித்தார். இதில்,அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர் எம். பாண்டியம்மாள், அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!