கோபிச்செட்டிப்பாளையம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானது, குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் உமாமகேஸ்வரி . கோபி பேருந்து நிலையம் அருகே உள்ள துணிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், உமாமகேஸ்வரி வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!