சத்தியமங்கலத்தில் பெரியார் சுவரொட்டி மீது காவி சாயத்தை ஊற்றிய மர்ம நபர்கள்

சத்தியமங்கலத்தில் பெரியார் சுவரொட்டி மீது காவி சாயத்தை ஊற்றிய மர்ம நபர்கள்
X

சத்தியமங்கலத்தில் பெரியார் சுவரொட்டியின் மீது மீது காவி சாயம் பூசியவர்களை கைது செய்யக் கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

சத்தியமங்கலத்தில் பெரியார் சுவரொட்டியின் மீது மீது காவி சாயம் பூசியவர்களை கைது செய்யக் கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில், சத்தியமங்கலம் நகரம் முழுவதிலும் பெரியாரின் புகைப்படம் இடம்பெற்ற சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் சத்தி பேருந்து நிலையம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் இருந்த பெரியார் படத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் காவிச் சாயத்தை பூசி இருந்தனர்.

தமிழக அரசு பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்துள்ள நிலையில், சத்தியமங்கலத்தில் பெரியாரின் புகைப்படத்தின் மீது காவிச் சாயம் பூசிய சமூக விரோதிகள் மீது தேச விரோத வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமெனக் கோரி திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த சதுமுகை பழனிச்சாமி தலைமையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சத்தி துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

இந்நிகழ்வில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சிசார்பில் தம்பிராஜன், தமிழ் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் குணசேகரன், தமுமுக சார்பில் ஆசிப், மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!