சென்னிமலையில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு விலையில்லா கால்நடைகள் வழங்கிய அமைச்சர்

சென்னிமலையில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு விலையில்லா கால்நடைகள் வழங்கிய அமைச்சர்
X

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு கால்நடைகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கிய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 35 அர்ச்சகர், பூசாரிகளுக்கு விலையில்லா கால்நடைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 35 அர்ச்சகர், பூசாரிகளுக்கு விலையில்லா கால்நடைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், 35 அர்ச்சகர், பூசாரிகளுக்கு கால்நடைகளை வழங்கி, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் கோசாலையில் உபரியாக உள்ள 35 கால்நடைகளை இந்து சமய அறநிலையத்துறை ஒரு கால பூஜை திருக்கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர், பூசாரிகளுக்கு விலையில்லாமல் வழங்கினார். மேலும், மலைக்கோயிலில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மலைக்கோயிலில் ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிக வளாகத்தினை திறந்து வைத்த நிகழ்ச்சியில், அவன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இரா.சுகுமார். சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி இளங்கோ, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், கோயில் செயல் அலுவலர் எம்.யுவராஜீ (கூ.பொ), கோயில் கண்காணிப்பாளர் சி.மாணிக்கம் உட்பட கோயில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!