சென்னிமலையில் சாலை மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

சென்னிமலையில் சாலை மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
X

சாலை மேம்பாட்டு பணியை துவக்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்.

சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் ரூ.88.30 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.88.30 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடக்க விழா நடந்தது.


இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். சென்னிமலை காட்டூர் ரோடு போடும் பணி ரூ.36 லட்சம் மதிப்பீட்டிலும், சோழன் வீதி, பாண்டியன் வீதி-1 ஆகிய பகுதிகளில் உள்ள மண் ரோடு தார் சாலையாக மேம்படுத்தும் பணி, மணிமலைக்காடு பண்ணாரியம்மன் கோவில் அருகில் ரூ.21.30 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை மேம்படுத்துதல் பணி, அரச்சலூர் ரோடு, குறுக்கு வீதி 1 முதல் 5 வரை ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் தார் ரோடு மேம்படுத்துதல் பணி என மொத்தம் ரூ. 88.30 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!