ஈரோடு: சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியில் முழுநேர ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்!

ஈரோடு: சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியில் முழுநேர ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்!
X
ஈரோடு மாவட்டம் சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியில் முழுநேர ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சு.முத்துசாமி இன்று (மே.14) திறந்து வைத்தார்.

சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியில் முழுநேர ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சு.முத்துசாமி இன்று (மே.14) திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் முழுநேர ரேஷன் கடையான குமிளம்பரப்பு – 1 முழுநேர ரேஷன் கடையிலிருந்து 356 குடும்ப அட்டைகளையும், ராயபாளையம்புதூர் முழுநேர ரேஷன் கடையிலிருந்து 447 குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 803 குடும்ப அட்டைகளைப் பிரித்து சித்தோடு வாய்க்கால்மேடு, காந்திநகர் என்ற இடத்தில் பொது மக்களின் வசதிக்காக வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் செயல்படக்கூடிய புதிய முழுநேர ரேஷன் கடையை அமைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்த முழுநேர ரேஷன் கடையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (மே.14) புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு முழுநேர ரேஷன் கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் கள அலுவலர் (பொது விநியோகத் திட்டம்) கோவிந்தன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் பாலாஜி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
Similar Posts
ஈரோடு: சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியில் முழுநேர ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்!
ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று புதிய உச்சமாக 106.16 டிகிரி பாரன்ஹீட் பதிவு!
பெருந்துறையில் மக்களுடன் முதல்வர் திட்ட 3ம் கட்ட சிறப்பு முகாம்: 157 பயனாளிகளுக்கு ரூ.8.97 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்!
அந்தியூரில் 52.54 லட்சம் கடனுதவி – எம்.எல்.ஏ.வின் மகிழ்ச்சி நிகழ்வு!
கூலித்தொழிலாளி மின்வேலி தொட்டு மரணம்
திருச்செங்கோட்டில் நடமாடும் மண் பரிசோதனை முகாம்
விடுதியிலிருந்து மாயமான மாணவி -  கல்லூரி மாணவி திடீரென காணாமல் போனது எப்படி?
பரமத்தியில் தேங்காய் விலை ஏற்றம்
விக்ரம சோழீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் –பக்தர்கள் கூட்டத்தில் திருவிழா ஊர்வலம்!
கூனவேலம்பட்டியில் புதிய பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு
ஆம்னி பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு – இறந்தவர் யார்?அதிர்ச்சி கொடுத்த சம்பவம்!
மஞ்சள் மார்க்கெட்டில் நாமகிரிப்பேட்டை முன்னிலை
விடுதி படகு போக்குவரத்து புதிய சேவை