/* */

கீழ்பவானி திட்ட வாய்க்காலில் புனரமைப்பு பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு

கீழ்பவானி பாசனத் திட்டத்தின் கீழ், புனரமைப்பு செய்யப்படவுள்ள வாய்க்கால் பகுதிகளை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கீழ்பவானி திட்ட வாய்க்காலில் புனரமைப்பு பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு
X

கீழ்பவானி பாசனத் திட்டத்தின் கீழ், புனரமைப்பு செய்யப்படவுள்ள வாய்க்கால் பகுதிகளை அமைச்சர் சு.முத்துசாமி  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தொட்டம்பாளையம் முதல் நம்பியூர் வட்டம் எலத்தூர் வரை, கீழ்பவானி திட்டத்தின் கீழ், புனரமைப்பு செய்யப்படவுள்ள வாய்க்கால் பகுதிகளை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:- கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் விவசாயத்திற்கு முழுமையாக பயன்படுகின்ற வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடைமடைக்கு தண்ணீர் போய் சேர வேண்டும். அதே நேரத்தில் அதற்கு முன்னால் இருக்கக் கூடிய விவசாய நிலங்களுக்கு அவர்களுக்கு பொதுவாக ஆரம்பத்தில் கிடைத்துக் கொண்டிருந்த தண்ணீரோ அல்லது ஊற்றோ குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். சட்டப்படியாக எவ்வளவு ஊற்று அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் வீணாக ஆற்றுக்கு செல்கின்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது. அதேபோல் முழுவதும் கடைமடை வரை வீணாகாமல் விவசாயத்திற்கு பயன்படுகின்ற வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும், வாய்க்கல் அடிப்பகுதியில் கான்கிரீட் போடும் பணி மேற்கொள்ள இருந்தது. தற்போது விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, கான்கீரீட் தளங்கள் அமைக்கக் கூடாது என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாய்க்கால்களின் பக்கவாட்டு பகுதியில் முழுமையாக சேதமான இடங்களில் அமைந்துள்ள தடுப்புச் சுவர்கள் சீர் செய்யப்படவுள்ளது. மேலும், வாய்க்கால்களை விட உயரமான இடங்களில் அந்தந்த பகுதி விவசாயிகளின் கருத்துகள் முழுமையாக கேட்டு சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கீழ்வானி திட்டத்தினை பயன்படுத்துகின்ற விவசாயிகள் மற்றும் கடைமடையில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவதே அரசின் நோக்கமாகும். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 140 இடங்களில் ஒவ்வொரு இடமாக பார்த்து விவசாயிகளிடம் கோரிக்கை கேட்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் பயன்பெறுகின்ற வசாயிகள் அனைவரும் முழுமையாக பாசனத்திற்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டும். மேலும் கிணறுகளில் ஊற்று மூலம் தண்ணீர் பெறுகின்ற விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வாய்க்கால் பகுதிகள் மட்டுமே சீர்செய்யப்படவுள்ளது. நிச்சயமாக கான்கிரீட் தளம் அமைக்கப்படாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, கீழ்பவானி திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் வட்டத்திற்குட்பட்ட, அக்கரைத்தத்தப்பள்ளி, கரித்தொட்டம்பாளையம், பூசாரிபாளையம், செண்பகப்புதூர், விண்ணப்பள்ளி, புதுக்கலையனூர், உக்கரம் மற்றும் நம்பியூர் வட்டத்திற்குட்பட்ட கூடக்கரை, ஆண்டிபாளையம் மற்றும் எலத்தூர் ஆகியப்பகுதிகளின் வழியே செல்லும் கீழ்பவானி பிரதான கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்பு பணிகள் தொடர்பாக விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வின்போது, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பழனிதேவி, கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், கோபி வட்டாட்சியர் தியாகராஜன் உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி பொறியாளர்கள் குமார், தினகரன், முருகேசன், சபரி, விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 April 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  3. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  5. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  6. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  7. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  8. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  9. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  10. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு