ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் அமைச்சர்கள் ஆய்வு

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் அமைச்சர்கள் கோவி.செழியன், முத்துசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, எம்பி பிரகாஷ், எம்எல்ஏ சந்திரகுமார் உள்ளிட்ட உள்ளனர்.
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் இன்று (மார்ச் 6ம் தேதி) நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில், உலகத் தரத்திலான விளையாட்டு மைதானம், நூலக வசதிகள் மற்றும் குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கோவி.செழியன் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கோவி.செழியன், முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தந்தை பெரியாரின் முயற்சியின் காரணமாக, கல்லூரிகள் இல்லாத அக்காலத்தில் கல்லூரிகள் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 1954ம் ஆண்டு 52 ஏக்கர் பரப்பளவில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி துவங்கப்பட்டு, மாணவர்களின் நலனுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரி பெரிய அளவில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் பல அறிஞர்களையும், சான்றோர்களையும் உருவாக்கி தந்த கல்லூரி சிக்கய்ய நாயக்கர் கல்லூரி ஆகும். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, இக்கல்லூரி அரசு கல்லூரியாக அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், உயர்கல்வித் துறையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில், ரூ.10.70 கோடி மதிப்பீட்டில், உலகத் தரத்திலான விளையாட்டு மைதானம், நூலக வசதிகள் மற்றும் குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த விளையாட்டு மைதானம் உலகத் தரத்தில் அமைக்கப்படுவதால், மாணவ, மாணவியர்களின் விளையாட்டுத் திறன் முன்னெடுத்து செல்வதற்கு மேம்படுவதோடு, ஏதுவாக விளையாட்டுத்துறையினை அமையும். மேலும் இங்கு அமைக்கப்படவுள்ள நூலகத்தில் மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எளிதில் கையாளும் வகையில் புத்தகங்கள் வைக்கப்படவுள்ளது.
மேலும், படித்த இளைஞர்கள் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அமைந்துள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில், பணிகளை துரித படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பெறப்பட்ட கருத்துக்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி முதல்வர் எஸ்.மனோகரன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu