அமைச்சர் சுப்பிரமணியன் நாளை (நவ.20) ஈரோடு வருகை

அமைச்சர் சுப்பிரமணியன் நாளை (நவ.20) ஈரோடு வருகை
X

அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (நவ.20) மாலை ஈரோடு மாவட்டம் தாளவாடிக்கு வருகிறார்.

Erode Live Updates, Erode Today News, Erode Live News - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நாளை (நவ.20) மாலை ஈரோடு மாவட்டம் தாளவாடிக்கு வருகிறார்.

கோயமுத்தூர் விமான நிலையத்திற்கு நாளை (நவ.20) மாலை 5 மணிக்கு வரும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரவு ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தாங்குகிறார்.

பின்னர், நவ.21ம் தேதி காலை 9 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியரின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு மலைவாழ் மக்களுக்காக புற்றுநோய் கண்டறியும் மற்றும் மாபெரும் பொது மருத்துவ முகாம் தாளவாடி அரேப்பாளையம் மைராடா வளாகத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

தொடர்ந்து, காலை 11.30 மணிக்கு பவானிசாகர் தொகுதி சேஷன்நகர் துணை சுகாதார நிலையத்தில் ரூ.3.31 கோடியிலான புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கிறார். இதன்பிறகு, மாலை 4.30 மணிக்கு ஈரோட்டில் இருந்து ரயில் மார்க்கமாக சென்னை புறப்பட்டு செல்கிறார். இரவு 9.30 மணிக்கு சென்னை சென்றடைகிறார்.

Tags

Next Story
ai and the future work ppts