கருணாநிதியின் உருவப் படத்திற்கு அமைச்சர் முத்துசாமி மரியாதை

கருணாநிதியின் உருவப் படத்திற்கு அமைச்சர் முத்துசாமி மரியாதை
X
ஈரோட்டில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு அமைச்சர் முத்துசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளையொட்டி, ஈரோட்டில் அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் முத்துசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளையொட்டி, ஈரோட்டில் அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் முத்துசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழாவையொட்டி, ஈரோடு பெரியார் நகர் 80 அடி சாலையில் உள்ள அமைச்சர் முகாம் அலுவலகத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வீட்டு வசதி வாரியம் நகர்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான முத்துசாமி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


அதன் பின், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும், ஈரோடு மாநகராட்சி ஒன்றாவது மண்டல தலைவர் பி.கே.பழனிசாமியின் ஏற்பாட்டில் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தில் உள்ள அருள் நெறி திருப்பணி மன்ற மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஆர்.ஹரிணி, முருகானந்த், ராகவன் மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த அமுல்ஹாசன், ஜி.கோபி, ஜெகதீஸ்வரன், யசோதரன் ஆகியோருக்கு அமைச்சர் முத்துசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார்.

அதைத் தொடர்ந்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கருணாநிதி, அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரது சிலைகளுக்கு அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


இந்நிகழ்ச்சிகளில், திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளரும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான பிரகாஷ், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் செந்தில்குமார், ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் குமார் முருகேஷ், ஈரோடு மாநகர் திமுக செயலாளர் சுப்ரமணியன், திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி. சச்சிதானந்தம், முன்னாள் எம்பி கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மாவட்ட பொருளாளரும் மாநகராட்சி கவுன்சிலருமான பி.கே.பழனிசாமி, பெரியார் நகர் பகுதி திமுக செயலாளர் அக்னி சந்துரு, ஈரோடு கோட்டை பகுதி திமுக செயலாளர் ராமச்சந்திரன், ஈரோடு மாநகர் இணைச்செயலாளர் சந்திரசேகர், ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர்கள் செல்ல பொன்னி மனோகரன், சசிகுமார் மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அனைத்து சார்பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்