பெருந்துறை அருகே மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியினை துவக்கி வைத்த அமைச்சர்

பெருந்துறை அருகே மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியினை துவக்கி வைத்த அமைச்சர்
X

பெருந்துறை அருகே வாய்க்கால்மேடு, நந்தா பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியினை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியினை அமைச்சர் முத்துசாமி இன்று (நவ.14) துவக்கி வைத்தார்.

பெருந்துறை அருகே பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியினை அமைச்சர் முத்துசாமி இன்று (நவ.14) துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, வாய்க்கால்மேடு நந்தா பொறியில் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது.

மாநில அளவிலான போட்டியில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சரால் கலையரசன், கலையரசி பட்டம் வழங்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.


இதில், ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி ஒன்றியம், பொன்னாத்தாவலசு. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. ஈரோடு ஒன்றியம், பி.பெ.அக்ரஹாரம், அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலையரசன், கலையரசி பட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் கடந்த வருடம் அதிக அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாவட்டங்களில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில், 2024- 2025ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி அளவிலான போட்டிகள் முடிவுற்று வட்டார அளவிலான போட்டிகள் 211.10.2024 முதல் 07.11.2024 வரை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் (14.11.2024) துவங்கி 20.11.2024 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் முதலிடம் பெற்ற 1912 அரசுப் பள்ளி மாணவர்கள், 820 அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 2732 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இப்போட்டிகளில் வாய்க்கால்மேடு நந்தா பொறியியல் கல்லூரி, இரட்டைகரடு நியூ ஐடியல் மேல்நிலைப் பள்ளி, ஈங்கூர் இந்துஸ்தான் கலை மற்றும் வணிகவியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெறும். மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

கல்வியை தவிர இதுபோன்ற விளையாட்டு போட்டிகளிலும் மாணவ, மாணவியர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்களை சாதனையாளர்களாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவியர்களின் திறமைகளை ஆசியர்கள் வெளி கொண்டு வர வேண்டும் என்றார்.

இவ்விழாவில் ஈரோடு நாடளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ். ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், முதன்மைக் கல்வி அலுவலர் கோ.சுப்பாராவ், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) நா.புஷ்பராணி, நந்தா கல்வி நிறுவன தலைவர் வெ.சண்முகம், செயலர் ச.நந்தகுமார் பிரதீப் உட்பட கல்வி அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!