பெரும்பள்ளம் ஓடையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை துவக்கி வைத்த அமைச்சர்

பெரும்பள்ளம் ஓடையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை துவக்கி வைத்த அமைச்சர்
X

ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் ஓடையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியினை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளம் ஓடையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியினை அமைச்சர் முத்துசாமி இன்று துவக்கி வைத்தார்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளம் ஓடையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியினை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (24ம் தேதி) துவக்கி வைத்தார்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம்-3 , முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் ஓடையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (24ம் தேதி) துவக்கி வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது, ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வரை 13 கிலோமீட்டர் உள்ள பெரும்பள்ளம் ஓடையில், ரூ.21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தூர்வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதில், முதற்கட்டமாக 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஓடையிலே குப்பைகளை போடாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படும் இடங்களில் வேலி அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு ஏறத்தாழ 12 ஏக்கர் கொண்ட இந்த குளத்தில் இருக்கிற ஆகாயத்தாமரை சுத்தம் செய்வதற்காக ஈரோடை அமைப்பின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவாக அப்பணிகள் முடிக்கப்படும். அந்த 12 ஏக்கர் முழுவதும் ஆகாயத்தாமரைதான் இருக்கிறது. எனவே அனைத்தையும் சுத்தம் செய்யவதற்கு ஈரோடை அமைப்பு முன்வந்துள்ளது. தூர்வாருகிற பணி நடைபெற்று வருகிறது. அப்பணிகளும் விரைவில் முடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், ஆணையாளர் மனீஷ், மாநகர பொறியாளர் விஜயகுமார், கண்காணிப்பு பொறியாளர் (நீர்வள ஆதாரத் துறை) ஜெகதீசன், செயற்பொறியாளர் (கீழ்பவானி வடிநில கோட்டம்) திருமூர்த்தி, 1ம் மண்டல குழு தலைவர் பி.கே.பழனிசாமி, டாக்டர்.சுதாகர் (ஈரோடை அமைப்பு) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself