அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு இதுவரை ரூ.1,624.73 கோடி செலவு: அமைச்சர் தகவல்

அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு இதுவரை ரூ.1,624.73 கோடி செலவு: அமைச்சர் தகவல்
X

அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு இதுவரை ரூ.1,624.73 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று (மே.,18) வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார்கள். குறிப்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தொடர்ச்சியாக கேட்டறிந்து வருகிறார்கள். அந்த வகையிலே அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்கள்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரி நீரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் (மொத்தம் 1045 எண்கள்) நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை நீரேற்று முறையில் செயல்படுத்திட தமிழக அரசின் மூலம் அரசாணை எண் : 84, பொதுப்பணி (I Spl 2) துறை, நாள் :28.03.2018 மூலம் ரூ.1652.00 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், அரசாணை எண்: 142, பொதுப்பணி (1 Spl 2) துறை, நாள்:08.04.2021 மூலம் ரூ.1756.88 கோடிக்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 99.00% சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணை மற்றும் ஆறு நீர்உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது. MS குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடிவடைந்துள்ளது (மொத்த நீளம் 267.5 கி.மீ) மற்றும் HDPE குழாய்கள் பதிக்கும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.

தற்சமயம் சுமார் 797.40 கி.மீ. அளவு HDPE குழாய் (மொத்த நீளம் 797.8 கி.மீ) பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மின்மாற்றிகள், VT பம்புகள், மின்மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர்உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பூமிக்கடியில் மின்சார தொடரமைப்புகள் பதிக்கும் பணி 100% முடிவுற்றுள்ளது (மொத்த நீளம் 63.15 கி.மி). நிலம் பயன்பாட்டு உரிமை (RIGHT OF USE) பெறும்பணி 100% முடிவுற்றுள்ளது. குளம் குட்டைகளில் Outlet Management System (OMS) பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்சமயம் சுமார் 1044 எண்கள் பொருத்தப்பட்டுள்ளது (மொத்தம் - 1045 எண்கள்) இத்திட்டத்திற்கு இதுவரை ரூ.1624.73 Gang அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20.02.2023 முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை ஆறு நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதானக் குழாய்களுக்கு சோதனை ஓட்டம் டிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீரேற்று நிலையங்களின் இடையிலுள்ள கிளைக் குழாய்கள் மற்றும் முடிக் 1045 குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள OMS கருவிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகளை விரைவாக முடித்திட கூடுதல் ஆட்களை நியமித்திடவும் (L&T) நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணியினை விரைவாக முடித்திட வேண்டு என தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, ஈரோடு மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்புப்பணிகள் காவல்துறையினர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) நாரணவ்ரே மனிஷ் ராவ், துணை ஆட்சியர் (பயிற்சி) காயத்ரி, செயற்பொறியாளர் மன்மதன் (நீர்வளத்துறை அத்திக்கடவு அவிநாசி திட்டம்), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் தங்கரத்தினம், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொ) மரிய ஆரோக்கியம், உதவி செயற்பொறியாளர்கள் சங்கர் ஆனந்த், வெங்கடாஜலம், விஜயகுமார், (L&T) அலுவலர்கள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!