மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் முத்துசாமி

மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் முத்துசாமி
X

மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் முத்துசாமி.

பெரியபுலியூர் ஊராட்சியில் ரூ.70.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதிக்குட்பட்ட பெரியபுலியூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் கோரிக்கையை ஏற்று, ரூ.70.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. திறப்பு விழாவான இன்று வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து, கட்டிடத்தின் உட்பகுதி பயன்பாடுகள் குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கேட்டறிந்தார். பின்னர், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மற்றும் அந்தியூர் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா