கோபிச்செட்டிப்பாளையம் அருகே ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு
X
டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் கொங்கர்பாளையம் ஊராட்சியில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலையில், அமைச்சர் முத்துசாமி ரூ.23.35 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 2 புதிய திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியவதாது: ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் கொங்கர்பாளையம் ஊராட்சி பனங்காட்டுக் கொரையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.11.35 லட்சம் மதிப்பீட்டில் தானியக் கிடங்கு புதிதாக கட்டப்பட்டுள்ளது. மற்றும் கொங்கர்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் புதிய நியாய விலைக்கடையும் ரூ.12லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கொங்கர் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஏறத்தாழ 85 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!