மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி
X

கண்காட்சியை  துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி. 

ஈரோடு- சத்தி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநில அளவிலான கைத்தறி துணிகளின் சிறப்பு கண்காட்சி, விற்பனையை அமைச்சர் துவக்கி வைத்தார்.

ஈரோடு-சத்தி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தேசிய கைத்தறி திட்டத்தின் கீழ், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநில கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.


இந்த கண்காட்சியில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியானது, இன்று டிச.29 முதல் ஜன.12 வரை 15 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும், இங்கு வாங்கப்படும் பொருட்கள் அனைத்திற்கும், 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வெங்கடாஜலம், ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story