ஈரோடு கோர்ட்டில் அமைச்சர் முத்துசாமி ஆஜர்

ஈரோடு கோர்ட்டில் அமைச்சர் முத்துசாமி ஆஜர்
X
ஊரடங்கு சட்டத்தை மீறியதாக பதியபட்ட வழக்கில் அமைச்சர் முத்துசாமி ஈரோடு கோர்ட்டில் இன்று ஆஜராகினார்.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செய்லாளர் முத்துசாமி தலைமையில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொரோனா காலகட்டம் என்பதால் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக முத்துசாமி உட்பட 10 திமுக நிர்வாகிகள் மீது டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் டவுன் போலீசார் முத்துசாமி உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் முத்துசாமி ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆனார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை ஈரோடு ஜெ.எம்.எண் 1 கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்காக அமைச்சர் முத்துசாமி ஜெ.எம்.எண் 1 கோர்ட்டில் ஆஜரானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் வடிவேல் வழக்கை வரும் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதையடுத்து அமைச்சர் முத்துசாமி உட்பட திமுக நிர்வாகிகள் கோர்ட்டில் இருந்து வெளியே சென்றனர். முன்னதாக அமைச்சர் கோர்ட்டில் ஆஜராவதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!