ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் முத்துசாமி ஆலோசனை

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் அமைச்சர் சு.முத்துசாமி ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்தும், இப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் துரிதப்படுத்துவது குறித்தும், புதிய திட்டப்பணிகளை தொடங்குவது குறித்தும், தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், 2025-26 நிதிநிலை அறிக்கையில் ஈரோடு மாவட்டத்திற்கு என தனியாகவும், பொதுவாகவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளின் மீது மேற்கொள்ள வேண்டிய அடிப்படை பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் துறை வாரியாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், பெறப்படும் கருத்துகள் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கைகளில் பல புதிய திட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து துறைகளிலும் அறிவித்துள்ளார்.
இத்திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடத்தில் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த அறிவிப்புக்கள் மட்டுமல்லாமல், ஏற்கனவே வழங்கப்பட்ட பணிகளில் முடிக்கப்பட்ட பணிகள், நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றினை ஆய்வு செய்து, அறிக்கையினை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தவிட்டுள்ளார்.
மேலும், 2025-26 நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்ட திட்டங்களை அமல்படுத்திட அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் துறைச்சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ளவற்கு நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டுள்ளார். இப்பணிகளை உடனடியாக துவங்குவதற்கும், துரிதப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில், துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் திட்டங்களை காலதாமதமின்றி, அதற்கான பணிகளை விரைவாக துவக்குவதற்கும், முடிப்பதற்கும் நடவடிக்கை எடுத்திட தெரிவித்துள்ளார்.
எனவே, அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தையும் விரைவாக செயல்படுத்த ஈரோடு மாவட்டம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu