ஈரோட்டில் கண்தான விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
ஈரோட்டில் கண்தான விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
ஈரோட்டில் கண்தான விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் முத்துசாமி இன்று (5ம் தேதி) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஈரோட்டில் 39வது தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு வாரத்தையொட்டி இதயம் நற்பணி இயக்கம், அரசன் கண் மருத்துவமனை, அரசன் கண் வங்கி இணைந்து கண்தான விழிப்புணர்வு பேரணியை இன்று (5ம் தேதி) நடத்தியது. இந்தப் பேரணிக்கு டாக்டர்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஈரோடு இதயம் நற்பணி இயக்க தலைவர் டாக்டர். எஸ்.வி.மகாதேவன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று, கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினர்களையும், அதிகளவில் கண் தானம் பெற்று தந்த சமூக ஆர்வலர்களை பாராட்டி சான்றிழ்கள் வழங்கினார்.
மேலும், கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வர்களுக்கு கண் கண்ணாடியை வழங்கினார். தொடர்ந்து, கண்தான விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது கருங்கல்பாளையம் பூங்குன்றனார் வீதியில் தொடங்கி, கேஎன்கே சாலை, காந்தி சிலை, காவேரி சாலை வழியாக காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர்.அபுல்ஹசன், டாக்டர்.கவுதம் கணபதி, டாக்டர்.தங்கவேலு, மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம், பகுதி செயலாளர் ராமச்சந்திரன், கவுன்சிலர் ஜெயந்தி, ஆர்.ஆர். துளசி பில்டர்ஸ் சத்தியமூர்த்தி, செங்குந்தர் கல்வி கழகம் செயலாளர் சிவானந்தன், மில்காவொண்டர் கேக் ராம்பிரகாஷ், அரசன் கண் மருத்துவமனை டாக்டர் அருண்பழனிகுமார், டாக்டர்.அபிநயா, புவனேஸ்வரன், தன்வந்திரி செவிலியர் கல்லூரி முதல்வர் பத்மாவதி, ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஒருங்கிணைப்பாளர் கல்பனாதேவி, இதயம் நற்பணி இயக்கம் செயலாளர் ராம்குமார், சரவண மோகன்குமார், சிவசண்முகம், செல்வராஜ், சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu