கோபிசெட்டிபாளையம் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து

கோபிசெட்டிபாளையம் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து
X

காயமடைந்த முதியவரை படத்தில் காணலாம் ‌

பங்களாப்புதூர் அருகே மினி லாரி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சைக்கிளில் சென்ற முதியவருக்கு காயம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் இருந்து அட்டை பாரம் ஏற்றிக்கொண்டு, கோயமுத்தூர் நோக்கி மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மினி லாரியை, தருமபுரி மாவட்டம் ரெட்டியூரை சேர்ந்த குமார் (வயது 30) என்பவர் ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். அப்போது, ஈரோடு மாவட்டம் அத்தாணி-சத்தி சாலையில் உள்ள பங்களாப்புதூரில் உள்ள பெட்ரோல் அருகே வந்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சாலையில் சென்று கொண்டிருந்த டி.என்.பாளையம் பெருமாள் கவுண்டர் வீதியை சேர்ந்த சையத்ரகமத்துல்லா (வயது 65) என்பவர் மீது மோதியதில், முதியவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர், தகவலறிந்து வந்த பங்களாப்புதூர் போலீசார் முதியவரை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்