/* */

சித்தோட்டில் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சித்தோடு ஆவின் நிறுவனத்தின் முன்பு, 13அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சித்தோட்டில் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

சித்தோடு ஆவின் பாலகம் முன்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் நிறுவனத்தின் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வெங்கிடுசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் முனுசாமி பங்கேற்று கவன ஈர்ப்பு உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்தி பசும் பாலுக்கு 42 ரூபாயும் எருமைப் பாலுக்கு 51ரூபாயும் வழங்க வேண்டும். மேலும், பால் கொள்முதலை நாளொன்றுக்கு 32 லட்சம் லிட்டரிலிருந்து ஒரு கோடி லிட்டராக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனையை அதிகரிக்க விற்பனை மையத்தை விரிவுபடுத்த வேண்டும்.

கால்நடைகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை தடுப்பூசி போடும் முறையை முறையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 25 March 2022 11:15 AM GMT

Related News