கவுந்தப்பாடி அருகே ஜவுளி கடையில் நள்ளிரவில் தீ விபத்து

கவுந்தப்பாடி அருகே ஜவுளி கடையில் நள்ளிரவில் தீ விபத்து
X

பைல் படம்.

கவுந்தப்பாடி நால்ரோடு பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி நால்ரோடு பகுதியில் செந்தாம்பாளையத்தை சேர்ந்த காசிவிஸ்வநாதன் என்பவர் ஜவுளி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், நேற்று இரவு கவுந்தப்பாடி போலீசார் ரோந்து பணியில், ஈடுபட்ட போது ஜவுளி கடையில் தீ புகை வந்துள்ளது.

உடனடியாக, கோபி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார், 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்தது. இந்த தீ விபத்து காரணமாக, சுமார் 10 லட்சம் மதிப்பிலான ஜவுளிகள் கருகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

Tags

Next Story
ai future project