கோபியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் நினைவு நாள் அனுசரிப்பு

கோபியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் நினைவு நாள் அனுசரிப்பு
X

கோபி கச்சேரி  மேடு பகுதியில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஈரோடு மாவட்டம் கோபி நகர அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

கோபி நகர அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எம்ஜிஆர் சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர அதிமுக சார்பில் கச்சேரி மேடு பகுதியில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோபி நகர செயலாளர் ப்ரிணியோ கணேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில், கோபி நகர் மன்ற உறுப்பினர்கள் தனசேகரன், கார்த்திகேயன், தமிழ்செல்வன் மற்றும் வார்டு செயலாளர்கள் அனு நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!