பிளஸ்1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கூலி தொழிலாளி போக்சோவில் கைது

பிளஸ்1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கூலி தொழிலாளி போக்சோவில் கைது
X

பைல் படம்.

அந்தியூர் அருகே பிளஸ் 1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கூலி தொழிலாளி போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாதுரை (வயது 25). கூலித் தொழிலாளி. மகாதுரை அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது அந்த உறவினர் வீட்டில் ஈரோடு பகுதியை சேர்ந்த பிளஸ்1 மாணவி வந்துள்ளார். அந்த மாணவி உறவினர் வீட்டுக்கு வந்ததால், மகாதுரை அந்த மாணவியிடம் பழகி வந்துள்ளார். இதைப்பயன்படுத்தி அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் தொல்லை செய்துள்ளார்.

இதில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார். மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் இது குறித்து மாணவிகளிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். இதில் மாணவி நடந்தவற்றை கூறி தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மகாதுரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!