கோபிசெட்டிபாளையம் அருகே உரக்கடையில் பணம் திருடிய கூலித்தொழிலாளி கைது

கோபிசெட்டிபாளையம் அருகே உரக்கடையில் பணம் திருடிய கூலித்தொழிலாளி கைது
X

கைது செய்யப்பட்ட சின்னச்சாமி.

கோபிசெட்டிபாளையம் அருகே உரக்கடையில் ரூ.25 ஆயிரம் பணத்தை திருடிய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம் செல்லிபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி (51), இவர் அதே பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார்.கடையில் கணக்காளராக அதே பகுதியை சேர்ந்த கவிதா என்பவர் பணிபுரிந்து வருகிறார், சம்பவ நாளான நேற்று முன்தினம் கவிதா வரவு செலவு கணக்கை பார்த்துவிட்டு, ரூ.25 ஆயிரம் ரூபாயை கடையில் இருந்த பெட்டியில் வைத்து பூட்டி விட்டு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர்.

பின்னர் வந்து பார்த்த போது பெட்டியில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியான குமாரசாமி, கடையில் வேலை செய்து வரும் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த சின்னசாமி (30) என்பவர் மீது கடையில் இருந்த ரூ.25 ஆயிரத்தை திருடியதாக பங்களாப்புதூர் போலீசில் நேற்று புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கூலித்தொழிலாளி சின்னசாமி திருடி பணத்தை 2 ஆயிரத்தை செலவு செய்து விட்டதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் சின்னசாமியை கைது செய்து, அவரிடம் இருந்து மீதமுள்ள ரூ.23 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டு குமாரசாமியிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு