ஈரோடு மாவட்டத்தில் 437 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 437 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்றும் , நாளையும் 437 மையங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்களுக்கு மாபெரும் தடுப்பூசி முகாம் நடக்கிறது.இதில் 437 மையங்களில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது. மக்கள் அந்தந்த மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் 50 இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இன்று மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நாளை 2-வது நாளாக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!