ஈரோடு மாவட்டத்தில் அக்.22 & 23ம் தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம், நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 6-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம், நாளை (வெள்ளிக்கிழமை) 589 இடங்களிலும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) 620 இடங்கள் என மொத்தம் ஆயிரத்து 189 இடங்களில் 2 நாட்கள் நடக்கிறது. இதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத, 18 வயது நிரம்பிய அனைவரும், தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். ஏற்கனவே, முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியாக இருந்தால், 84 நாட்கள் நிறைவடைந்த பிறகும், கோவேக்சின் தடுப்பூசியாக இருந்தால், 28 நாட்கள் நிறைவடைந்த பிறகும் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள, உணவு கட்டுப்பாடு ஏதுமில்லை. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. 18 வயது நிரம்பிய பொதுமக்கள் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு, கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.
இதேபோல் ஈரோடு மாநகர் பகுதிகளிலும் 64 மையங்களிலும், 40 நடமாடும் வாகனங்கள் மூலமும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடப்படும் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் இந்த மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu