எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ முகாம்

எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மருத்துவ முகாம்
X

முகாமில் கலந்து கொண்டவர்கள்.

எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது.

அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இன்று காலை நடைபெற்ற மருத்துவ முகாமை ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் துவக்கி வைத்தனர். இந்த மருத்துவ முகாமில் பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்டனர். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. இதில், எண்ணமங்கலம், கோவிலூர், விராலி, காட்டூர், மூங்கில்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர். எண்ணமங்கலம் அரசு மருத்துவர்கள் சதீஷ்குமார், சரவண பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!