108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்: சேலத்தில் நாளை நடக்கிறது

108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்: சேலத்தில் நாளை நடக்கிறது
X

வேலைவாய்ப்பு முகாம் குறித்த அறிவிப்பு

அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சேலத்தில்(மே.12) நாளை நடக்கிறது

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலை வாய்ப்பு முகாம் சேலம் அண்ணா பூங்கா அருகில் தமிழ் சங்க அண்ணா நூலக வளாகத்தில் 12ம் தேதி நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி. நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. அல்லது அறிவியல் முதன்மை பாடங்களில் பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். நேர்காணல் நடைபெறும் நாளில், பங்கு பெறுவோருக்கு வயது, 19 முதல் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இப்பணிக்கு மாத ஊதியம் 14 ஆயிரத்து 966 ரூபாய் வழங்கப்படும்.

டிரைவர் பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சி அல்லது அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.பொது வாகன உரிமம் (பேட்ஜ்) மற்றும் இலகு ரக வாகன டிரைவர் லைசன்ஸ் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி, ஓட்டுனர் லைசன்ஸ் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் நேர்காணலில் சரிபார்க்க கொண்டு வர வேண்டும். இதற்கு மாத ஊதியம் 14 ஆயிரத்து 766 ரூபாய் வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு : 9154251323, 9150036019,9154251540,7397724832,7397724802 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.இந்த தகவலை 108 ஆம்புலன்ஸ் சேவை பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story